ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் வேதா
விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள படம் விக்ரம் வேதா. திரைப்படம் வெளியானது முதல் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கணவன், மனைவி இணைந்து இயக்கிய இந்த படத்தின் மேக்கிங்கும் பாராட்டுகளை குவித்துவருகிறது.
இறுதிச்சுற்றுக்கு பிறகு மாதவனின் அடுத்த படம், அடுத்தடுத்த வெற்றிப்படங்களை தந்துள்ள விஜய் சேதுபதி என ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு அதிகம் இருந்தது. காலம்காலமாக நாம் கேட்டு வரும் விக்ரமாதித்யன், வேதாளம் கதையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர் கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர், காயத்ரி.
கணவன் மனைவியாக சேர்ந்து பணியாற்றுவது மிகவும் எளிமையாக இருப்பதாக குறிப்பிடும் புஷ்கர், காயத்ரி முந்தைய படங்களைப்போல பெரும் இடைவெளியின்றி அடுத்தப் படத்தை உடனடியாக தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பாசிட்டிவ் விமர்சனங்கள், பேசப்படும் மேக்கிங் யுக்தி என இந்தப் படம் வசூலை குவிக்கத் தொடங்கியுள்ளது.