புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லர்: மாஸ் காட்டும் கமல்ஹாசன்

புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லர்: மாஸ் காட்டும் கமல்ஹாசன்

புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லர்: மாஸ் காட்டும் கமல்ஹாசன்
Published on

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லரை புர்ஜ் கலிஃபாவில் வெளியிடவுள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கொரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கியமான படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த மே 15 ஆம் தேதி வெளியானது. வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுக்க ‘விக்ரம்’ வெளியாகவுள்ள நிலையில், துபாயில் உள்ள உலகின் உயர்ந்தக் கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லரை வெளியிடவுள்ளது படக்குழு.

163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் நீளம் கொண்டது. இந்தக் கட்டடத்தின் பெரிய திரையில்தான் ‘விக்ரம்’ ட்ரெய்லர் வரும் ஜூன் 2 ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று படத்தைத் தயாரிக்கும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ‘நவரசா’ படத்தின் ட்ரெய்லர் புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com