விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ஷூட்டிங் அக்டோபரில் ஆரம்பம்
விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ எப்போது தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்எஸ் விமல் இயக்க உள்ள திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’. இந்தப் படம் 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளது. இது குறித்த செய்தியை இயக்குநர் சில மாதம் முன்பாக வெளியிட்டிருந்தார். மேலும் இப்படம் 32 மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது. மேலும் ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இதற்காக செட் போட்டு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ், இந்தி,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக மட்டும் தற்போதைக்கு அதிகாரப்பூர்வகாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதை மகாபாரதத்தை தழுவி எடுக்கப்பட உள்ளது. இது ஒரு காவியத்தை தழுவி எடுக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.