ஸ்கெட்ச், ஸ்கெட்ச் பண்ணா ஸ்கெட்ச் மிஸ் ஆகாது: விக்ரம் பஞ்ச்

ஸ்கெட்ச், ஸ்கெட்ச் பண்ணா ஸ்கெட்ச் மிஸ் ஆகாது: விக்ரம் பஞ்ச்

ஸ்கெட்ச், ஸ்கெட்ச் பண்ணா ஸ்கெட்ச் மிஸ் ஆகாது: விக்ரம் பஞ்ச்
Published on

விக்ரமின் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள ஸ்கெட்ச் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ஸ்கெட்ச். இதில் தமன்னா, ராதாரவி, வேல ராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர். அந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் விக்ரம் முரட்டு முகத்தில் மீசையும் தாடியுமாக வலம் வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தாதா கெட் அப்பில் அவர் பேசும் ‘ஸ்கெட்ச், ஸ்கெட்ச் பண்ணா ஸ்கெட்ச் மிஸ் ஆகாது. அப்படி மிஸ் ஆனா சொல்லு அந்த ஸ்கெட்சை ஸ்கெட்ச் பண்ணி அடிக்கிறேன்’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. அந்த பஞ்ச் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. டீசர் வெளியான சில மணிநேரங்களில் ட்விட்டர் ட்ரெண்ட்டிலும் இடம் பிடித்துள்ளது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com