\
இன்ஸ்ட்ராகிராமில் வெளியான விக்ரம் சிக்ஸ் பேக் ஸ்டில்

இன்ஸ்ட்ராகிராமில் வெளியான விக்ரம் சிக்ஸ் பேக் ஸ்டில்

இன்ஸ்ட்ராகிராமில் வெளியான விக்ரம் சிக்ஸ் பேக் ஸ்டில்
Published on

தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நடிகர் விக்ரம் தனது சிக்ஸ்பேக் ஸ்டில் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சினிமா பிரபலங்கள் அனைவரும் ட்விட்டர் பக்கத்தில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது நடிகர் விக்ரம் அதற்கு நேர்மாறாக இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். அவரது மகன் நடிக்க உள்ள செய்தியை அவர் இந்தப் பக்கத்தில்தான் பகிர்ந்து கொண்டார். அதேபோல் இப்போது தனது சிக்ஸ் பேக் ஸ்டில் ஒன்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 
ஐ படத்திற்கு பிறகு உடல் எடை குறைந்திருந்த விக்ரம் மீண்டும் அதிவேகத்தில் தனது பழைய உடம்பை உடற்பயிற்சி மூலம் கொண்டு வந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள படம் தற்போது அவரது ரசிகர்களால் ட்விட்டர் பக்கத்தில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வெளியான புகைப்படத்தில் கஸ்டுமஸ்தாக உள்ள விக்ரமைக் கண்ட ரசிகர்கள் வியந்து பேசி வருகிறார்கள். 52 வயதில் இந்த மனிதர் இப்படி இருக்கிறாரே என குறிப்பிடுள்ளனர். 
நடிகர் நகுல் ”ஒஎம்ஜி! வாட் ஆன் இன்ஸ்பிரேஷன்” என்று கூறியிருக்கிறார். கூடவே சீயானிஸம் என ஹேஷ்டேக் இட்டுள்ளார். ஒஎம்ஜி என்றால் ‘ஓ! மேரா இண்டியா’ என்று அர்த்தம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com