இந்தியில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் சரித்திர பின்னணிக் கொண்ட திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சரித்திரப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு ’மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாள காவியப்படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் தான் மஹாவீர் கர்ணா படத்தையும் இயக்குகிறார்.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நியூயார்க்கைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. மேலும், விக்ரம் நடிப்பில் ஜனவரி 12 ஆம் தேதி ’ஸ்கெட்ச்’ திரைப்படம் வெளிவர உள்ளது. அதனைத்தொடர்ந்து, கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம், ஹரியின் சாமி 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், விக்ரமின் இந்தப் புதிய அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.