விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் மறுபடியும் த்ரிஷா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை சம்பாதித்த திரைப்படம் சாமி. இதன் இரண்டாம் பாகம் தற்போது சாமி ஸ்கொயர் என எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் புதிய நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரும் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இந்தப் பாகத்தில் கீர்த்திக்கு வலுவான பாத்திரம் இருப்பதாலும் தனது பாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று நினைத்த த்ரிஷா படத்தில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் செய்தி போட்டார்.
ஆனால் கதைப்படி த்ரிஷாவின் பங்கு தேவைப்படுவதால் நடிகர் விக்ரமே முயற்சி எடுத்து த்ரிஷாவின் வீட்டிற்குச் சென்று சமாதானம் செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆகவே அவர் மீண்டும் சாமி ஸ்கொயரில் இணைய இருக்கிறார் என தெரிய வருகிறது.