\
புதிய கெட்டப்பில் விக்ரம்: சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகம்

புதிய கெட்டப்பில் விக்ரம்: சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகம்

புதிய கெட்டப்பில் விக்ரம்: சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகம்
Published on

நடிப்பதற்காக உடலையே உருக்கி வேறொரு வடிவம் காட்டுகிறவர் சீயான் விக்ரம். ஐ படத்திற்காக அவர் உடலமைப்பில் காட்டிய வித்தியாசங்களும் நடிப்பும் பலராலும் வியப்புடன் பாராட்டப்பட்டன. அவரது மகன் துருவ் விக்ரம், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் படத்தை வெளியிட்டுள்ளார். அதுவே தற்போது சீயான் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருளான பின்னணியில் அவர் ஒரு போர்வீரனைப் போல நிற்கிறார். அடர்த்தியான தாடி, நீண்ட முடி என முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் கையில் டாட்டூ குத்தியிருக்கிறார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் மகிழ்ச்சியுடன் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதனிடையே, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன. ஊரடங்கு முடிந்தால் திரைக்கு வந்துவிடும். இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரத்தில் அவருக்கு சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரம். அதுவொரு துப்பறியும் த்ரில்லர் படம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com