ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான் விக்ரம்

ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான் விக்ரம்
ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான் விக்ரம்

சீயான் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. 

புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.  இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல பகுதியிலிருந்து வந்திருந்த மூவாயிரத்திற்கும் அதிகமான விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றினார் விக்ரம். இது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஓ பட்டர்ஃப்ளை பாடலை விக்ரம் மேடையில் பாடினார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com