டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது 'டாணாக்காரன்'

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது 'டாணாக்காரன்'

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது 'டாணாக்காரன்'
Published on

முழுக்க முழுக்க காவலர் பயிற்சிப் பள்ளியைக் கதைக்களமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள 'டாணாக்காரன்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், லால், எம்.எஸ். பாஸ்கர், 'கோலிசோடா' மதுசூதனன், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவலர் பயிற்சிப் பள்ளியில் இருப்போருக்கு கொடுக்கப்படும் கடுமையான பயிற்சிகள், அதிகாரிகளின் கண்டிப்பு, அதில் உள்ள குரோதம் உள்ளிட்டவற்றை இயக்குநர் தமிழ் கதையாக்கி படமாக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். காவல் துறையில் பணியாற்றிய தமிழ், திரைப்படங்களின் மீதான ஆர்வத்தில் பணியை ராஜினாமா செய்துவிட்டு இயக்குநராகியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com