சினிமா
’அடக்குமுறை இருந்தா கேள்வி வரத்தான் செய்யும்’: மிரட்டும் ’டாணாக்காரன்’ டீசர்
’அடக்குமுறை இருந்தா கேள்வி வரத்தான் செய்யும்’: மிரட்டும் ’டாணாக்காரன்’ டீசர்
வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தமிழ் இயக்கத்தில் ‘டாணாக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படத்தின் டீசரில் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் பிரபு, லால் காதாப்பாத்திரங்களும் வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. போலீஸ் ஆவதற்கு முன்பு பட்டாலியனில் பயிற்சி எடுக்கும்போது காவலர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளையும் அடிமைத்தனத்தையும் காட்டுக்கிறது ‘டாணாக்காரன்’. குறிப்பாக, ஜிப்ரானின் இசை மிரட்டலாக அமைந்துள்ளது. ‘அடிமைத்தனமும் அடக்குமுறையும் இங்க இருக்கு. அதை எதிர்த்து கேள்வி வரத்தான் செய்யும்’ போன்ற வசங்கள் கவனம் ஈர்க்கின்றன.