`நாயகன் மீண்டும் வரார்...!’ - விக்ரம் படக்குழு வெளியிட்ட அடுத்த வாவ் அப்டேட்

`நாயகன் மீண்டும் வரார்...!’ - விக்ரம் படக்குழு வெளியிட்ட அடுத்த வாவ் அப்டேட்

`நாயகன் மீண்டும் வரார்...!’ - விக்ரம் படக்குழு வெளியிட்ட அடுத்த வாவ் அப்டேட்
Published on

திரையரங்குகளில் வசூலை குவித்து வரும் விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் இணைந்த நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. அனிருத் இசையில் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம், அதிக வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மொத்த வசூலை, ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே கடந்து சாதனை புரிந்திருந்தது. சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்கள் வட இந்தியாவிலும், உலக அளவிலும் வசூலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து வருகிறது. குறிப்பாக ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பிறகு, பாலிவுட் ரசிகர்களையும் தென்னிந்திய திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

அந்த வரிசையில்  படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஜூலை 8-ஆம் தேதி முதல் ஓடிடியில் 'விக்ரம்' படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com