கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாகும் ‘விக்ரம்’ கிளிம்ப்ஸ்?

கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாகும் ‘விக்ரம்’ கிளிம்ப்ஸ்?
கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாகும் ‘விக்ரம்’ கிளிம்ப்ஸ்?

கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி ‘விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த வருட பிறந்தநாளின்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது. இந்த நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி ’விக்ரம்’ படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படும் கிளிம்ப்ஸ் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com