நாளை வெளியாகிறது ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - லோகேஷ் கனகராஜ்

நாளை வெளியாகிறது ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - லோகேஷ் கனகராஜ்
நாளை வெளியாகிறது ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - லோகேஷ் கனகராஜ்

கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.

இருந்தாலும் கமலஹாசனின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, அவரின் பிறந்தநாளன்று விக்ரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு முதல் பார்வை வெளியாகிறது என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். அதேபோல் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com