சியானுடன் மீண்டும் கைகோர்க்கும் த்ரிஷா..!

சியானுடன் மீண்டும் கைகோர்க்கும் த்ரிஷா..!

சியானுடன் மீண்டும் கைகோர்க்கும் த்ரிஷா..!
Published on

இயக்குனர் ஹரி உடன் சியான் விக்ரம் மீண்டும் இணையும் ‘சாமி 2’ படத்தின் கதாநாயகியாக நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படம் சாமி.. இதில் விக்ரம் நாயகனாகவும், த்ரிஷா நாயகியாவும் நடித்திருந்தனர். த்ரிஷாவுக்கு அந்தப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

‘இருமுகன்’ படத்தின் இசை வெளியீட்டின்போது, ‘சாமி 2’ திரைப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஹீரோ விக்ரம் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஹீரோயின் யார் என்பது குழப்பமாகவே இருந்தது. தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகத்திலும் த்ரிஷாவே நாயகியாக தேர்ந்தெடுக்கபட்டதாக சாமி- 2 ன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உறுதி செய்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் சாமி 2 வின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com