\
துருவ் விக்ரம் - விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்!

துருவ் விக்ரம் - விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்!

துருவ் விக்ரம் - விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்!
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்- துருவ் விக்ரம் நடிக்கும் "விக்ரம் 60" படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று முதல் தொடங்கியது. ஆனால் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் தொடர்ச்சியாக ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் மூன்று மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த த்ரில்லர் படத்தில் சிம்ரன், வாணி போஜன் நடிக்கிறார்கள். ஏற்கெனவே, அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டும் போஸ்டரிலும் அனிருத் பெயர் இடம் பெற்றது. ஆனால், தற்போது அனிருத்துக்கு பதில் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com