\
விக்ரம் - துருவ் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 14-ல் நிறைவு

விக்ரம் - துருவ் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 14-ல் நிறைவு

விக்ரம் - துருவ் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 14-ல் நிறைவு
Published on

விக்ரம் நடித்து வரும் அவரின் 60-வது படத்திற்கான படப்பிடிப்பு கொல்கத்தாவில் வரும் 14-ஆம் தேதி முடிகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் மகன் துருவ் உடன் இணைந்து, விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு சென்னை, புதுச்சேரி, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா சென்றுள்ளனர். அங்கு வரும் 14-ஆம் தேதி வரை விக்ரம் 60 படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அத்துடன் அந்தப் படத்திற்கான முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

இதற்காக விக்ரம்-60 படக்குழுவினர் தனி விமானம் மூலம் கொல்கத்தா சென்றுள்ளனர். கேங்ஸ்டர் வகையில் உருவாகும் இந்த படத்தில் விக்ரம்,  துருவ் விக்ரமை தவிர வாணி போஜன், சிம்ரன், பாபிசிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதேபோல் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com