விஜய்சேதுபதி ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கியது உண்மையா?
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பன். இதில் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடிக்கிறார்.இப்படத்தை ஆர்.பன்னீrசெல்வம் இயக்குகிறார்.
இப்படத்தில் விஜய்சேதுபதி ஜல்லிக்கட்டுக் காளையை அடக்குவதை போன்று ஒரு காட்சி வருகிறது. உண்மையில் ஜல்லிக்கட்டுக் காளையை விஜய்சேதுபதி
அடக்கினாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கதாநாயகன் சேதுபதியிடம் கேட்டபோது, “நம்பளால என்ன அளவுக்கு முடியுமோ அத செய்திருக்கிறோம். நானே போய் காளையை அடக்கினேனா? இல்லையா? என கேட்டா இல்லை என்றுதான் சொல்லுவேன். ஏற்கெனவே வலைதளங்களில் ஒரு வீரர் ஜல்லிக்கட்டுக் காளையை அடக்குவதைபோன்ற படம் ஒன்று உலாவி வந்தது. அந்தப் படத்தை ஒரு கருவாக எடுத்துக் கொண்டு எங்கள் காட்சியை உருவாகினோம். எந்தளவுக்கு சேஃப்டியா கயிறு கட்டிக்கிட்டு பத்திரமா நடிக்க முடியுமோ அந்தளவுக்கு நடித்திருக்கிறேன்” என்றார்.
இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு மெரீனா போராட்டத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் “கதையை
யோசிக்கும் போதே உருவானக் காட்சி அது. நாங்க மெரீனா போராட்டத்துக்கு முன்பே அந்தக் காட்சியை படமாக எடுத்தே முடித்துவிட்டோம்” என கூறினார்.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதி பெரிய மீசை வைத்து நடித்திருக்கிறார். அவருக்கு பெரிய மீசை என்றால் மிகவும் பிடிக்குமாம். ‘சங்குதேவன்’ படத்தில்
அப்படி ஒரு கேரக்டர் இருந்ததாகவும் ஆனால் அந்தப் படம் வேறு சில காரணங்களால் நின்றுவிட்டது என்றும் கூறிய அவர் அந்த ஆசை கருப்பன் மூலம்
நிறைவேறியுள்ளதாக தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.