பல படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி எடக்கு எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் விரைவில் வெளியாக இருக்கிறது. அரைடஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் அவர் அடுத்து ‘எடக்கு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். கருப்பன், 96 படங்களைத் தொடர்ந்து இப்படம் வெளியாக இருக்கிறது. நிமோ ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாலு தயாரித்து வரும் இப்படத்தை எஸ்.சிவன் இயக்கி வருகிறார். ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
தற்போது சூப்பர் டீலக்ஸ், 96, ஜுங்கா, அநீதிக் கதைகள், ஒருநாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.