#EnNenjilKudiyirukkum | சக்கப்போடு போட்ட விஜய்யின் ட்வீட்... உலக அளவில் கிடைத்த ரீச்!

#EnNenjilKudiyirukkum | சக்கப்போடு போட்ட விஜய்யின் ட்வீட்... உலக அளவில் கிடைத்த ரீச்!
#EnNenjilKudiyirukkum | சக்கப்போடு போட்ட விஜய்யின் ட்வீட்... உலக அளவில் கிடைத்த ரீச்!

விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றிருந்த இந்த விழாவில் படத்தின் நட்சத்திரங்கள், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பலரும் கலந்துக்கொண்டனர்.

வாரிசு பட விழா என்றதும் சமூக வலைதளம் முழுக்க கோலாகலமாக ரசிகர்கள் பல பதிவுகளை பகிர்ந்த வண்ணம் இருந்தனர். இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் கூறிய குட்டிக் கதைகள் வைரலானதோடு, ரசிகர்களோடு விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவும் பட்டித்தொட்டியெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

அதுவும் #EnNenjilKudiyirukkum என்ற ஹேஷ்டேக்கை விஜய்யே மேடையில் வைத்து போடச் சொன்னது ரசிகர்களின் ஆரவாரத்தை எகிறச் செய்தது. அந்த செல்ஃபி வீடியோ விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டிருந்தார்கள். தற்போது வரையில் 7.6 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. அதாவது 76 லட்சத்துக்கும் அதிகமானோர் விஜய்யின் செல்ஃபி வீடியோவை கண்டிருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், விஜய்யின் இந்த ட்வீட் மட்டுமே பகிரப்பட்ட 39 நிமிடங்களிலேயே 1 லட்சம் லைக்ஸ்களை பெற்றிருக்கிறது என World Top Tweets என்ற அமைப்பு கண்காணித்து அறிவித்திருக்கிறது. இதனையறிந்ததும் விஜய் ரசிகர்கள் மேலும் குதூகலித்து போயிருக்கிறார்கள்.

முன்னதாக மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போது நெய்வேலியில் திரண்ட ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்கு 5 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேலானோர் லைக் இட்டிருக்கிறார்கள். இது விஜய்யின் மொத்த ட்வீட்களிலேயே அதிக லைக்ஸ்களை குவித்த பதிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com