\
நடிகர் விஜய்யின் 66ஆவது படத்தை இயக்குகிறார் வம்சி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 66ஆவது படத்தை இயக்குகிறார் வம்சி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 66ஆவது படத்தை இயக்குகிறார் வம்சி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on: 

நடிகர் விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு திரையுலக இயக்குநர் வம்சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார். பீஸ்ட் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தளபதி66 படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்தப்படத்தை பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கில் சாப் படத்தை தயாரித்த தில் ராஜூ தயாரிக்கிறார். வம்சி இறுதியாக மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹேக்டே நடிப்பில் வெளியான மகாரிஷ் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com