நடிகர் சங்க கட்டடத்திற்கு நடிகை விஜயகுமாரி 5 லட்சம் நிதி

நடிகர் சங்க கட்டடத்திற்கு நடிகை விஜயகுமாரி 5 லட்சம் நிதி

நடிகர் சங்க கட்டடத்திற்கு நடிகை விஜயகுமாரி 5 லட்சம் நிதி
Published on

தென்னிந்திய நடிகர் சங்க கட்டம் கட்டுவதற்காக  நடிகை விஜயகுமாரி நிதியளித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை விஜயகுமாரி. 1950களில் இருந்தே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திராவிட இயக்க சினிமா வரலாற்றில் இவருக்கு தனி இடம் இவருக்கு உண்டு. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மனைவி இவர். மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், இளம் நடிகர்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்துள்ளார். ‘தங்க மகன்’ , ‘மாவீரன்’, ‘நான் மகான் அல்ல’,‘பூவே உனக்காக’, ‘தெனாலி’ போன்ற படங்களில் நடித்து காலம் கடந்த நடிகையாக நடைப்போட்டு வருகிறார். 

நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர் சங்க கட்டடத்தை கட்டி எழுப்புவதற்காக தன்னால் இயன்ற நிதியை அளித்துள்ளார். சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தியை சந்தித்து அதற்கான 5 லட்ச ரூபாய் காசோலையை வழங்கினார். இதற்கான அறிவிப்பை சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com