\
விஜய்காந்த் மகனுக்கு வில்லன் ஆன தயாரிப்பாளர்!

விஜய்காந்த் மகனுக்கு வில்லன் ஆன தயாரிப்பாளர்!

விஜய்காந்த் மகனுக்கு வில்லன் ஆன தயாரிப்பாளர்!
Published on

விஜய்காந்த் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ’மதுரை வீரன்’ படத்தில் அவருக்கு வில்லனாக தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் நடிக்கிறார்.

ராஜலஷ்மி பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன், பிரபுதேவா நடித்த ’காதலா காதலா’, கமல்ஹாசன் நடித்த, ’பம்மல் கே சம்மந்தம்’, ’பஞ்சதந்திரம்’, சரத்குமார் நடித்த ’திவான்’ உட்பட 14 படங்களை தயாரித்திருப்பவர் பி.எல்.தேனப்பன். இப்போது ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ’பேரன்பு’ படத்தை தயாரித்து வருகிறார். இதற்கிடையே விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ’மதுரைவீரன்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். 

இதுபற்றி பி.எல்.தேனப்பன் கூறும்போது, ’இயக்குனர் பாலா, அவரது பிதாமகன் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டார். அப்போது நடிக்க முடியாமல் போனது. பிறகு ’நெல்லை சந்திப்பு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தேன். இப்போது இயக்குனர் பி.ஜி.முத்தையா, இந்த கேரக்டர் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நடிக்க கேட்டார். சம்மதித்தேன். இதில் கிராமத்து ஊர் தலைவராக நடிக்கிறேன். ஷூட்டிங் முடிந்துவிட்டது. நல்ல கேரக்டர் வந்தால் தொடர்ந்து நடிப்பேன்’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com