விஜய்க்காக சம்பளம் பேசாமல் நடித்தவர் விஜயகாந்த்: சந்திரசேகர் ஓபன் டாக்

விஜய்க்காக சம்பளம் பேசாமல் நடித்தவர் விஜயகாந்த்: சந்திரசேகர் ஓபன் டாக்

விஜய்க்காக சம்பளம் பேசாமல் நடித்தவர் விஜயகாந்த்: சந்திரசேகர் ஓபன் டாக்
Published on

நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு உதவியவர் நடிகர் விஜயகாந்த் என்று இயக்குநர் சந்திரசேகர் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் விஜயகாந்த் திரை உலகில் அடி எடுத்து வைத்து 40 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து மிகப் பெரிய விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அதில் அவருடன் இணைந்து நடித்த திரை நட்சத்திரங்கள் பலர் கலந்துக் கொண்டனர். நடிகர் சரத்குமார் என் வளர்ச்சிக்கு விஜய்காந்த்தான் உதவியாக இருந்தார் என குறிப்பிட்டார். அதேபோல் நடிகர் சத்யராஜ் ஈழத்தமிழர்களுக்காக முதன்முதலாக திரை உலகினர் சார்பில் நிதித் திரட்டியவர் விஜய்காந்த்தான். அதே போல் அவரது மகனுக்கு பிரபாகரன் என பெயரிட்டதுதான் அவரின் தில் என  என்று கூறினார்.

விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய இயக்குநராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரது மகன் விஜய்யை வைத்து ‘செந்தூரப்பாண்டி’ படத்தை இயக்கிய போது ஏற்பட்ட அனுபத்தை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் “படத்திற்காக விஜயகாந்திடம் சம்பளம் பேசினேன். அவர் முதலில் ஷூட்டிங் தொடங்குங்கள். சம்பளம் பற்றிய விஷயத்தை எல்லாம் இறுதியில் பேசிக்கொள்ளலாம்” என்று கூறினார். அதோடு என் மகனை கட்டி அணைத்து பாராட்டினார். என் மகனின் வளர்ச்சியில் விஜயகாந்தின் பங்கு மிகப் பெரியது என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com