ரஜினியின் லட்சியத்தை நிறைவேற்றுவார் விஜய்; மதுரையில் வலம்வரும் போஸ்டர்கள்

ரஜினியின் லட்சியத்தை நிறைவேற்றுவார் விஜய்; மதுரையில் வலம்வரும் போஸ்டர்கள்
ரஜினியின் லட்சியத்தை நிறைவேற்றுவார் விஜய்; மதுரையில் வலம்வரும் போஸ்டர்கள்

ரஜினியின் இலட்சியத்தை விஜய் நிறைவேற்றுவார் என அவரது ரசிகர்கள் மதுரை முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

நடிகர் ரஜினிகாந்த் ‘அரசியல் கட்சி தொடங்கபோவதில்லை’ என அறிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் விஜயை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், “வேண்டாம் 2026 ல் இல்லைன்னா எப்பவுமே இல்லை 'நீங்க வாங்க தம்பி இனி..' என விஜய்யிடம் ரஜினி கூறுவதுபோல தலைப்பிடப்பட்டுள்ளது. 'அதிசயமும் அற்புதமும் உங்களால் மட்டுமே சாத்தியம் ரஜினி சார்...,' என்று துவங்கும் அந்த வாசகங்கள், உங்க லட்சியம் நிச்சயம் விஜயால் நிறைவேறும் என வாசகம் முடிக்கப்பட்டுள்ளது.

வாசகம் மட்டுமின்றி நடிகர் விஜய்யை ரஜினியைக் கையைப்பிடிப்பது போன்ற புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. கரும்பாறை பகுதியைச் சேர்ந்த மெர்சல் அருண் என்பவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com