’பிகிலு’க்குப் பிறகு உருவாகும் ’தளபதி 64’ படத்தில் நடிகர் விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் பிகிலு படத்தில் நடித்துள்ளார் விஜய். இதில் அவர் ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். மற்றும் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.
இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை ’மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் விஜய் சேது பதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கும் விஜய்-க்கும் நடக்கும் மோதல்தான் படம் என்று கூறப்படுகிறது. இதற்காக, இதுவரை அவர் வாங்காத அளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாந்தனு, மாளவிகா மோக னன் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத் தில் விஜய் பேராசிரியராக நடுத்தர வயதுள்ள கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.