விஜய் நடிக்கும் 'பீஸ்ட்’ திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

விஜய் நடிக்கும் 'பீஸ்ட்’ திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

விஜய் நடிக்கும் 'பீஸ்ட்’ திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்
Published on

விஜய் நடிக்கும் 'பீஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. 

நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று முடிந்தது. அந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பிய நிலையில்,  தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கலாம் என்று நடிகர் விஜய் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாக வந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள தனியார் அரங்கில் தொடங்கியுள்ளனர். இந்த படத்தில் பணிபுரியும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com