கனடாவில் உயர்க் கல்வி படித்து வந்த நடிகர் விஜய் மகன் சஞ்சய், அண்மையில் சென்னைக்குத் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டன. பல மாதங்களாக தன் ஆசை மகனைக் காணாமல் தவித்து வந்த விஜய், தற்போது நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் கனடாவில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் விஜய் மகன் தவித்து வருவதாகவும், அதனால் நடிகர் விஜய் கவலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
சென்னையில் உள்ள அமெரிக்க சர்வதேசப் பள்ளியில் படித்த சஞ்சய்க்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்ச தாங்கமாட்டா என்ற ஒரு பாடல் காட்சியில் தந்தையுடன் நடித்திருந்தார். குறும்படம் ஒன்றிலும் நடித்தார். பட்டப் படிப்புக்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை திரும்பிய சஞ்சய் ஸ்டார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்குச் சென்று பெற்றோரைச் சந்தித்துள்ளார்.