விஜய் படத்திற்கு மட்டும் அனுமதி தருவதா ? கொந்தளிக்கும் திரை உலகம்

விஜய் படத்திற்கு மட்டும் அனுமதி தருவதா ? கொந்தளிக்கும் திரை உலகம்
விஜய் படத்திற்கு மட்டும் அனுமதி தருவதா ? கொந்தளிக்கும் திரை உலகம்

விஜய் படத்திற்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் தலைப்பு வைக்காததால் ‘தளபதி62’, ‘விஜய்62’ என இரண்டு ஹேஷ்டேக் போட்டு செய்திகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்த் திரைப்பட உலகமே கியூப் பிரச்னையால் முடங்கிப் போய் உள்ளது. திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பழைய படங்களையே வெளியிட்டு திரையரங்கங்களை நடத்திக் கொள்கிறோம் என திரையரங்க உரிமையாளர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “பல வருடமாக சொல்லி வருகிறேன். வேலை நிறுத்தம் என்பது கூடாது” என கூறியுள்ளார். ஆகவே அவர் மறைமுகமாக தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுகளை விமர்சித்திருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. அதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பு தரப்பு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதைபோல ‘நாடோடிகள்2’ படத்தின் படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிலர் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்கள். மேலும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் அனுமதி பெற்றுள்ளதாகவும் செய்தி வெளியிட்டு வருகின்றனர். எல்லா படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு எதிர்ப்பை தெரிவித்து வரும் நேரத்தில் விஜய் படம் உள்ளிட்ட சில படங்கள் எந்த இடையூறும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி வருவதால் திரை உலகினர் பலரும் கொதித்துப் போய் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com