\
அனிமேஷன் படத்திற்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி!

அனிமேஷன் படத்திற்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி!

அனிமேஷன் படத்திற்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி!
Published on

மும்மொழிகளில் வெளியாகவிருக்கும் அனிமேஷன் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் ஐயர்ன் மேனுக்கு குரல் கொடுத்து அதிர வைத்தார் விஜய் சேதுபதி. அவரைத்தொடந்து, தி லயன் கிங் படத்திற்கு இந்தியில் சாருகானும், தமிழில் நடிகர் சித்தார்த்தும் குரல் கொடுத்திருந்தார்கள். இதுபோன்று அனிமேஷன் படங்களுக்கு நடிகர்கள் குரல் கொடுப்பதால், அனிமேஷன் படம் போல் அல்லாமல் தங்களுக்கு பிடித்த நடிகர்களே நடிக்கிறார்கள் என்ற கற்பனைக்குள் வந்துவிடுவார்கள் ரசிகர்கள். அதனால், முன்னணி நடிகர்களை அனிமேஷன் கேரக்டர்களுக்கு டப்பிங் பேச வைக்கின்றன, தயாரிப்பு நிறுவனங்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் அருண் குமார் இயக்கும் அனிமேஷன் படத்திற்கு குரல் கொடுக்கவுள்ளார். தமிழ்,கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் ‘தீர’ (புத்தி ரித்தி சித்தி) படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. அந்தப் போஸ்டரில் ஹீரோவுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுக்கவுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து முடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com