\
“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி ட்வீட்

“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி ட்வீட்

“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி ட்வீட்
Published on

800 படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்த நிலையில், அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி நன்றி.. வணக்கம் என விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேசமயம் இலங்கை ஊடகம் ஒன்றிற்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ஒரு நல்ல கதை என்பதால் அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என தெரிவித்தார். இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் படம் பதில் சொல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தனது சுயசரிதை படமான 800-ல் இருந்து விலகிக் கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். அதில், விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை விடுப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் முத்தையா முரளிதரனின் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டி பதிவிட்ட விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என ட்வீட் செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com