எஸ்பி ஜனநாதன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜனநாதன் இயக்கத்தில் ‘புறம்போக்கு என்கிற போதுவுடைமை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் புதிய படத்தை 7சி எண்டர்டேயின்மண்ட் நிறுவனத்தின் ஆறுமுக குமார் தயாரிக்கிறார். இதற்கு ‘லாபம்’என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ஜகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதியை பேட்டி எடுத்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ‘பேட்ட’ திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் இந்தாண்டு இவர் பல படங்களில் நடிக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டிலக்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ‘சிந்துபாத்து’,‘மாமனிதன்’போன்ற படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தெலுங்கில் ‘சியா ரா நரசிம்மா ரேட்டி’என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
ஸ்ருதி ஹாசனுடன் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.