பெரிய ஹீரோக்களுக்கு வில்லன்: விஜய் சேதுபதி தொடங்கும் அடுத்த ஆட்டம்!
அல்லு அர்ஜூனா நடிக்கும் தெலுங்கு திரைப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழில் விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட சில படங்கள் கையில் உள்ளன. கதாநாயகன் மட்டுமின்றி வில்லன்
கதாபாத்திரத்திலும் ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி, விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி
தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் என பல மொழிகளிலும் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. தெலுங்கின் முக்கிய நாயகனான அல்லு அர்ஜூனா நடிக்க உள்ள
அடுத்தப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய அல்லு
அர்ஜூனா இதனை உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் வேதா, பேட்ட, செக்கச்சிவந்தவானம் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்கள் கவனம் ஈர்த்த நிலையில், எதிர்வரும் திரைப்படங்களும் அவருக்கு சிறப்பாக அமையும் என்றே ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்