ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி

ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி

ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி
Published on

தெலுங்கு படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

தெலுங்கில் ’உப்பெனா’ என்ற பெயரில் படம் ஒன்று தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் புச்சு பாபு சனா இயக்கும் இந்தப் படத்தில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கி றார். இவர் தமிழில், அத்வைதா என்ற பெயரில் ‘அழகர்சாமியின் குதிரை’, ‘பாண்டிய நாடு’, ‘சினேகாவின் காதலர்கள்’, ’மாங்கா’ ஆகிய படங் களில் நடித்தவர்.

கடல் பகுதியை பின்புலமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் ஹீரோயின் கீரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதை ராம்சரண் நடித்த ’ரங்காஸ்தம்’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

இவர் ஏற்கனவே, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்போது இந்த படத்தில் நடிக்கிறார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com