ஹாலிவுட் பட ரீமேக்கில் ஆமிர்கான் நண்பராக விஜய் சேதுபதி?

ஹாலிவுட் பட ரீமேக்கில் ஆமிர்கான் நண்பராக விஜய் சேதுபதி?

ஹாலிவுட் பட ரீமேக்கில் ஆமிர்கான் நண்பராக விஜய் சேதுபதி?
Published on

ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர்கானுடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

டாம் ஹாங்ஸ், ராபின் ரைட், கேரி சிசிஸ், மைகெல்டி வில்லியம்சன் உட்பட பலர் நடித்து 1994 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம், ’பாரஸ்ட் கெம்ப்’ (Forrest Gump). ராபர் ஜெமெக்ஸ் இயக்கியிருந்த இந்தப் படம், ஆஸ்கர் விருதை பெற்றது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ள இந்தி நடிகர் ஆமிர்கான்,’லால் சிங் சத்தா’ ( Laal Singh Chadda) என்ற பெயரில் இந்தியில் உருவாக்குகிறார்.

(பாரஸ் கெம்ப் படத்தில்...)

ஆமிர்கான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் படத்தில் மைகெல்டி வில்லியம்சன், ஹீரோவுக்கு நண்பராக நடித்திருப்பார். அவர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தெரிகிறது. இந்தி ரீமேக்கில் தமிழராக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ஆமீர்கான் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார் விஜய் சேதுபதி. அது இந்த படம்தான் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com