சினிமா
மலையாளத்தில் ஜெயராமுடன் இணைகிறார் விஜய் சேதுபதி
மலையாளத்தில் ஜெயராமுடன் இணைகிறார் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி, மலையாள படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடிக்கிறார்.
விஜய் சேதுபதி தற்போது, ரஜினியின் ’பேட்ட’, தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ’சூப்பர் டீலக்ஸ்’, சீனு ராமசாமி இயக்கும் ’மாமனிதன்’, தெலுங்கில் ’சைரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்தும் அவர் வரிசையாக படங்களில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையே முதன்முறையாக மலையாள படத்திலும் அவர் நடிக்கிறார். இதில் ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கும் ஹீரோவுக்கு இணையான வேடம் என்று கூறப்படுகிறது. படத்தை சனில் கலத்தில் இயக்குகிறார். சத்யம் சினிமாஸ் நிறுவனம் சார்பாக பிரேமச்சந்திரன் ஏஜி தயாரிக்கிறார்.
ஜனவரி மாதம் தொடங்கும் இந்தப் படத்தின் தலைப்பை இன்று மாலை ஜெயராம், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட இருக் கிறார்.