\
அமேசான் ப்ரைமில் வெளியாகிறது 'துக்ளக் தர்பார்'

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது 'துக்ளக் தர்பார்'

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது 'துக்ளக் தர்பார்'
Published on

விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் தில்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இந்தப் படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். அரசியல் நையாண்டி வகையில் எடுக்கப்பட்டுள்ள துக்ளக் தர்பார் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்தப் படத்தை நேரடியாக ஓ.டி.டி-ல் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com