ரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி

ரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி

ரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி
Published on

தான் இவ்வளவு பெரிய மனிதனோடு நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ட’. இந்தப் படம் பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, நவாஜுதீன், சித்திக் என நட்சத்திரங்கள் பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடைபெற்றது. 

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடலை கடந்த 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அனிருத், எஸ்பிபி ஆகியோர் இணைந்து பாடிய இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினிக்கு குத்து பாடல் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதையடுத்து ‘உல்லல்லா’ என்ற பாடலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில் ’பேட்ட’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பேட்ட திரைப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். ’பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இது குறித்து  விழா மேடையில் பேசிய அவர், ''நான் காணாத கனவு ஒன்று நிஜமாகியுள்ளது. நான் இவ்வளவு பெரிய மனிதனோடு நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரஜினியின் வேலைகளை பார்த்தால் அந்த கடவுளே கை தட்டுவார். இப்போது சினிமா துறைக்குள் நுழைந்த எனக்கு அவ்வபோது மெத்தனம் உண்டு. ஆனால் ரஜினி ஒவ்வொரு காட்சியிலும் அர்ப்பணிப்போடு நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நான் வில்லன் தான். தான் கேமரா முன்னாள் நிற்கவில்லை கோடிக்கணக்கான ரசிகரின் முன்னாள் நிற்கிறோம் என்பது போலவே பொறுப்போடு ரஜினிகாந்த் இருப்பார். நானும் அந்த நிலைக்கு வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என ரஜினி பாணியில் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com