\
சினிமாக்காரர்கள்  என்றால் கேவலமாக பார்க்கிறார்கள்: விஜய் சேதுபதி

சினிமாக்காரர்கள் என்றால் கேவலமாக பார்க்கிறார்கள்: விஜய் சேதுபதி

சினிமாக்காரர்கள் என்றால் கேவலமாக பார்க்கிறார்கள்: விஜய் சேதுபதி
Published on

நடிகர் விஜய்சேதுபதி, சினிமாக்காரர்கள் என்றாலே கேவலமாக பார்க்கிறார்கள் என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள ‘கீ’ திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. அப்போது விழாவில் விஜய்சேதுபதி, விஷால், ஜீவா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பேசிய விஜய்சேதுபதி “சினிமாக்காரர்கள் என்றாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். ஏதோ தரம் தாழ்ந்து பார்க்கிறார்கள். எங்களை ஏன் கேவலமாக பார்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? வந்து ஒரு படம் எடுத்து பாருங்கள் பிறகு தெரியும். உயிர்போய் உயிர் வந்துவிடுகிறது” என்று வருந்தி பேசுயுள்ளார். 

அவ்விழாவில் ‘வல்லவன்’ படத்தினால் பெருநஷ்டத்திற்கு ஆளானதாக தயாரிப்பாளர் தேனப்பன் குறிப்புட்டுப் பேச லேசாக சலசலப்பு ஏற்பட்டது. அதற்குப் பதிலளித்த நடிகர் விஷால், “ சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’படத்தால் நஷ்டமான தயாரிப்பாளர் மைகல் ராயப்பனுக்காக ஒரு படம் முன்பணம் வாங்காமல் நடித்து தருகிறேன்”என்று உறுதியளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com