\
தேசிய விருதை விட தமிழன் என்ற உணர்வை அதிகம் மதிக்கிறேன்: விஜய் சேதுபதி

தேசிய விருதை விட தமிழன் என்ற உணர்வை அதிகம் மதிக்கிறேன்: விஜய் சேதுபதி

தேசிய விருதை விட தமிழன் என்ற உணர்வை அதிகம் மதிக்கிறேன்: விஜய் சேதுபதி
Published on

நடிப்புக்கான தேசிய விருதை பெறுவதை விட தமிழன் என்ற உணர்வை அதிகம் மதிப்பதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் கருப்பன் திரைப்படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, “மக்கள் மீது அன்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இதில் நடிகர்களை மட்டும் அரசியலுக்கு வரலாமா என்று கேட்பது ஏன்? தமிழ் மக்கள் உணர்வா? தேசிய விருதா என்று வரும்போது, நான் மக்கள் உணர்வுக்கு பின் தான் இருப்பேன். தேசிய விருது எனக்கு முக்கியமில்லை. ரயில் பயணச்சீட்டுக்களில் நம் மொழியை எடுத்ததே கோபமாக தான் வருகிறது” என்று கூறினார்.

விழாவில் விஜய் சேதுபதி, நடிகை தான்யா, இயக்குநர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com