“ எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது” - மாஸ்டர் ப்ரோமோவில் மாஸ் காட்டும் விஜய்சேதுபதி

“ எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது” - மாஸ்டர் ப்ரோமோவில் மாஸ் காட்டும் விஜய்சேதுபதி

“ எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது” - மாஸ்டர் ப்ரோமோவில் மாஸ் காட்டும் விஜய்சேதுபதி
Published on

மாஸ்டர் படத்திலிருந்து விஜய்சேதுபதி கேரக்டர் தொடர்பான ப்ரோமா வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீஸரானது கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சமீபத்திய சில நாட்களாக படத்தின் ப்ரோமா காட்சிகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியான ப்ரோமாக்களில் விஜய் பேசிய வசனங்கள் கவனம் ஈர்த்தன.

அதனைத்தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி சம்பந்தமான ப்ரோமோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் விஜய் சேதுபதி,  “உலகத்தில யாரை பார்த்து வேண்டுமானாலும் பயப்படாலாம். ஆனா சாவு உங்கள நெருங்கிருச்சுனா, எதிர்க்க இருக்கிறவன் எமனா இருந்தாலும் பயப்படக் கூடாது” என்று பேசுகிறார். இந்தப் ப்ரோமா காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக அரசு, திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் மாஸ்டர் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ரசிகர்களை எதிர்பார்ப்பில் இருந்து விலகி விடாமல் பார்த்துக் கொள்ள படக்குழுவினரும் ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com