நடிகர் விஜய் சேதுபதியின் சகோதரி தொடங்க இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு இறைவி எனப் பெயர் சூட்டியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் சகோதரி ஜெயஸ்ரீ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடையை தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் பகுதியில் தொடங்க இருக்கிறார். இந்தக் கடைக்கு இறைவி என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக்கடை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் இறைவி. விஜய் சேதுபதிக்கு ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனர்.