\
செப்டம்பர் 1, 8 தேதிகளில் அடுத்தடுத்து ரிலீசாகும் விஜய்சேதுபதியின் படங்கள்!

செப்டம்பர் 1, 8 தேதிகளில் அடுத்தடுத்து ரிலீசாகும் விஜய்சேதுபதியின் படங்கள்!

செப்டம்பர் 1, 8 தேதிகளில் அடுத்தடுத்து ரிலீசாகும் விஜய்சேதுபதியின் படங்கள்!
Published on

விஜய்சேதுபதி நடித்துள்ள விக்ரம்வேதா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் நடித்துள்ள கருப்பன் படம் செப்டம்பர் 8ம்தேதி ரிலீசாக இருக்கிறது.

அரைடஜன் படங்களை கையில் வைத்திருக்கும் விஜய்சேதுபதி 96, கருப்பன், அநீதிக்கதை, ஒருநாள் பார்த்து சொல்றேன், கொலையுதிர்காலம், சீதக்காதி, புரியாதபுதிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நேற்று 96 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அவரது நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள புரியாதபுதிர் செப்டம்பர் 1ம் தேதியும் ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள கருப்பன் செப்டம்பர் 8ம் தேதியும் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com