\
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’  படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு - கவனத்தை ஈர்த்த டீசர்

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு - கவனத்தை ஈர்த்த டீசர்

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு - கவனத்தை ஈர்த்த டீசர்
Published on

விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28-ம் தேதி திரையிரங்குகளில் வெளியாகிறது.

‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘டாக்டர்’ பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டநிலையில், டீசரின் முடிவில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். நகைச்சுவை மற்றும் ரொமன்ஸ் உடன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com