வெளியானது விஜய்சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ டீசர் - டார்க் காமெடி ஜானரில் ஒரு மௌனப் படம்

வெளியானது விஜய்சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ டீசர் - டார்க் காமெடி ஜானரில் ஒரு மௌனப் படம்
வெளியானது விஜய்சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ டீசர் - டார்க் காமெடி ஜானரில் ஒரு மௌனப் படம்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மௌனப் படமான ‘காந்தி டாக்ஸ்’ டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் ‘விடுதலை’, பாலிவுட்டில் ‘Merry Christmas’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து அட்லீயின் ‘ஜவான்’ படத்திலும் இணைய உள்ளார். இந்நிலையில், விஜய் சேதுபதி டார்க் காமெடி ஜானரில் நடித்துள்ளார். ‘காந்தி டாக்ஸ்’ (Gandhi Talks) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வசனங்கள் ஏதுமின்றி மௌனப்படமாக வெளிவரவுள்ளது. அவருடன் அரவிந்த் சாமி, அதிதி ராவ், பாலிவுட் நடிகர் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.


‘செக்க சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து அரவிந்த் சாமி மற்றும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. படத்தில் அனைவரும் பணம் சம்பந்தமான காட்சிகளில் நடித்துள்ளனர். மேலும் எல்லோர் கைகளிலும் ஒரு குரங்கு பொம்மை, அதாவது தீயவைகளை பேசாதே, தீயவைகளை கேட்காதே, தீயவைகளை பார்க்காதே என்ற குரங்கு பொம்மை உள்ளது.

கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கரண் ராவத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 1987-ம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி தயாரித்து, கமல்ஹாசன், அமலா நடிப்பில் வெளியான ‘பேசும் படம்’ (Pushpaka Vimana) என்ற படமும் இதேபோன்று டார்க் காமெரி ஜானரில் மௌனப் படமாக வெளியான நிலையில், தற்போது ‘காந்தி டாக்ஸ்’ அதேபோன்று உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு திரைக்கு வரவிருப்பதாக டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com