புலி, பாம்பு, பள்ளம்... மூச்சுவாங்க டயலாக் பேசிய விஜய் சேதுபதி - (வீடியோ)

புலி, பாம்பு, பள்ளம்... மூச்சுவாங்க டயலாக் பேசிய விஜய் சேதுபதி - (வீடியோ)

புலி, பாம்பு, பள்ளம்... மூச்சுவாங்க டயலாக் பேசிய விஜய் சேதுபதி - (வீடியோ)
Published on

சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லருக்கான டப்பிங்கில் மூச்சுவாங்க டயலாக் பேசிய விஜய் சேதுபதியின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கியுள்ள இரண்டாவது படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ ஃபகத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர்.

‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் போலவே இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநரின் இரண்டாவது திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசரில் எந்த கதாபாத்திரத்தின் டயலாக்கும் இல்லாமல் விஜய் சேதுபதி குரலில் ஒரு கதை திரும்ப திரும்ப சொல்வது போலவே அமைந்திருக்கும். வேறு வேறு மாடுலேசனில் விஜய் கூறும் அந்த கதை படத்தின் முக்கிய கருவாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அந்த கதையை டீசருக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் டயலாக்கை பேசி, தவறவிட்டு, மீண்டும் சரியாக பேசி முடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com