லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’ இந்தி ரீமேக் - முனீஸ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி!

லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’ இந்தி ரீமேக் - முனீஸ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி!
லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’ இந்தி ரீமேக் - முனீஸ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி!

‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் தான் நடித்துவரும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக இயக்குநராக அறிமுகமானது கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம்தான். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்ததால்தான், ‘கைதி’, ‘மாஸ்டர்’, தற்போது ‘விக்ரம்’ என அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் பிஸியாக இயக்கி வருகிறார். மாநகரம் படத்தில் சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா, சார்லி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இந்தி ரீமேக் ’மும்பைக்கர்’ படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில், விஜய் சேதுபதி முனீஸ்காந்த் வேடத்தில் நடிப்பவராக சொல்லப்பட்டது. முனீஸ்காந்த் குழந்தையை கடத்துபவராக நடித்திருந்தார். தற்போது குழந்தையை கடத்தும் கெட்டப்பில் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

ட்விட்டரிலும் ‘மும்பைக்கர்’ படத்தை குறிப்பிட்டு இயக்குநர் சந்தோஷ் சிவனை டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் ‘லாபம்’ படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com