\
வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு நிதியுதவி

வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு நிதியுதவி

வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு நிதியுதவி
Published on

வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் (45) நேற்று மரணம் அடைந்தார். அவரின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில், வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com