\
ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி!

ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி!

ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி!
Published on

ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, ராதிகா, டாப்ஸி ஆகியோர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி பன்னு ஒரு முழு நகைச்சுவை படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர்களுடன் ராதிகா, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி, ராதிகா உள்ளிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள்.  டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஜெய்ப்பூர் சென்றார்.

இந்நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உருவப்படத்திற்கு விஜய் சேதுபதி, ராதிகா, டாப்ஸி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com