அஜீத் வழியில் விஜய் சேதுபதி... நெகிழும் இயக்குநர்!

அஜீத் வழியில் விஜய் சேதுபதி... நெகிழும் இயக்குநர்!

அஜீத் வழியில் விஜய் சேதுபதி... நெகிழும் இயக்குநர்!
Published on

தென்மேற்கு படத்தில் விஜய்சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனுநாமசாமி. அவர் இயக்கிய ஐந்து படங்களில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் உள்ளிட்ட மூன்று படங்கள் விஜய்சேதுபதி நடித்தவை. இந்நிலையில் இருவரும் இணைந்து மாமனிதன் படத்தில் பணியாற்றி வருகின்றனர். 

படத்தில் இணைந்து பணியாற்றியதைவிட இருவரும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள். தொழில்முறையிலும், தனிப்பட்ட முறையிலும் விஜய்சேதுபதியை நன்கு உணர்ந்தவர் சீனுராமசாமி. விஜய்சேதுபதி பல ஹிட்டுக்களை கொடுத்தபோதிலும் எளிமை மாறாமல் நடந்து கொள்வதை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் சீனுராமசாமி விஜய் சேதுபதி பற்றி தனது ட்விட்டர், மற்றும் முகநூல் பக்கங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். 

அதில் விஜய்சேதுபதி மீன்குழம்பு சோற்றை சீனுராமசாமிக்கு ஊட்டிவிடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்

"கவளம் பெற்றேன். மூன்று கவளங்கல் கூடுதலாக ஊட்டியும் விடப்பட்டது. சட்டென்று சார் ஆ.. காட்டுங்க என்றான். இது தன்னியல்பில் வருவது. உள்ளத்தில் எளியவனே இதை செய்ய முடியும். நான் அதை சேதுவிடம் கற்க தொடங்கி நாளாச்சு’’ என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் "பிறருக்கு உணவிட்டு பரிமாறி மகிழ்ச்சியடைபவர்களில் திரு,அஜித், விஜய் சேதுபதியை பார்த்து நெகிழ்ச்சியடைகிறேன். தனித்து வந்தவர்களின் மனிதாபிமானம்’ என சீனுராமசாமி தெரிவித்துள்ளார். அஜீத் ஓசைபடாமல் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு உதவிகள் செய்து வருவதைப்போல விஜய்சேதுபதியும் உதவிகள் செய்து வருவதால் சீனுராமசாமி அஜீத்துடன் விஜய்சேதுபதியை இணைத்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com